/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவாரி வெடி விபத்து; அண்ணா பல்கலை குழு ஆய்வு
/
குவாரி வெடி விபத்து; அண்ணா பல்கலை குழு ஆய்வு
ADDED : பிப் 02, 2024 12:50 AM

பல்லடம்;பல்லடம் அருகே நடந்த குவாரி வெடி விபத்து குறித்து, அண்ணா பல்கலை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் பிரதானமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இங்குள்ள கல்குவாரி ஒன்றிலிருந்து வெடி சப்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, சுற்றுவட்டாரப் பகுதியில் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. அருகில் இருந்த கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஜன்னல், கதவில் இருந்த கண்ணாடிகள் உடைந்தும் விழுந்தன. விதிமுறை மீறி டெட்டனைட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, விவசாயிகள் பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப குழுவினர், சம்பந்தப்பட்ட கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்வேறு கட்ட சோதனைகளின் அடிப்படையில் மாதிரிகளை சேகரித்து எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

