/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் கற்கள் வெட்டியெடுத்த குவாரி; ரூ.10.02 கோடி செலுத்த அதிரடி உத்தரவு

ADDED : ஜூலை 14, 2025 12:54 AM
திருப்பூர்; கல்குவாரியில், சட்ட விரோதமாக மண் மற்றும் கல் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறி, 10 கோடி ரூபாய் செலுத்த, ஆர்.டி.ஓ.,உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையத்தில் இயங்கி வந்த குவாரிகளில் சட்டவிரோதமாக கல் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
விவசாயிகள் புகாரை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் கூட்டு புல தணிக்கை மேற்கொண்டனர். ''கோடங்கிபாளையத்தில் இயங்கி வந்த 'பவர் ரெடிமிக்ஸ்' மற்றும் கணேசன் என்பவருக்கு சொந்தமான குவாரிகளில் சட்ட விரோதமாக மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகமாக வெட்டி எடுக்கப்பட்ட சாதாரண கற்கள், கிராவல் மண்ணுக்கான, கனிம தொகை, 'சீனிரேஜ்' தொகை மற்றும் அபராத தொகை என, 10.02 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் அல்லது 30 நாட்களுக்குள் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம்'' என்று திருப்பூர் ஆர்.டி.ஓ மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், குவாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இன்று (14ம் தேதி)போராட்டம் அறிவித்திருந்தது.
மொத்தம், 10.02 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிட்டுள்ளதால், போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.