ADDED : ஜூன் 25, 2026 03:22 AM

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், கோவைஜி.எஸ்.டி. ஆணையரகம் மற்றும் சென்னை வரி செலுத்துவோர் சேவை இயக்குனரகம் சார்பில், எம்.எஸ்.எம்.இ. மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
தினேஷ் பங்கர்கர், மத்திய கலால் வரித்துறை முதன்மை ஆணையர்:
எளிதாக வணிகம் செய்யும் சூழலை உருவாக்குவதே ஜி.எஸ்.டி. ஆணையகத்தின் முதன்மை நோக்கம்.
இதற்காக அனைத்து அலுவலகங்களிலும்'ஜி.எஸ்.டி. சேவா கேந்திரா', 'சுவிதா கேந்திரா'க்கள் போன்ற உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய வரி செலுத்துவோர் பதிவு மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
நீரவ் மாலிக், சென்னை வரி செலுத்துவோர் சேவை முதன்மை இயக்குனரக (டி.ஜி.டி.எஸ்.) முதன்மை கூடுதல் தலைமை இயக்குனர்:
வரி செலுத்துவோரின் வீட்டு வாசலுக்கே சென்று சேவை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம்.
நாட்டின் ஜி.டி.பி.யில் 31.1 சதவீதம், ஏற்றுமதியில் 48.5 சதவீதம் மற்றும் உற்பத்தியில் 35.4 சதவீதம் பங்களிப்பை வழங்கி, 32 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் எம்.எஸ்.எம்.இ. துறை நாட்டின் பொருளாதாரத் துணாகத் திகழ்கிறது.
சென்னை தேசியக் கல்வி நிறுவன உதவி இயக்குனர் ஸ்ரீவத்சன் ஜி.எஸ்.டி. நடைமுறைகள் குறித்து விளக்கினார். கோவை இணை கமிஷனர் ஜெய்ஸன் பிரவீன்குமார் நன்றி கூறினார். தொழில்முனைவோர் எழுப்பிய சந்தேகங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகவிளக்கமளித்தனர்.
உலகிற்கே முன்னுதாரணம்: நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் 55 சதவீதம் பங்களிப்பைத் திருப்பூர் வழங்குகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு தரும் இத்துறையில் பெண்களின்பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
மேலும், 2,100 மெகாவாட் காற்றாலை - -சூரிய ஆற்றல் முதலீடுகள், பூஜ்ஜிய திரவ வெளியேற்ற முறை, தினசரி 13 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் 95 சதவீதம் நீர் மறுசுழற்சி மூலம் திருப்பூர் உலகிற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.
உலகளாவிய சந்தையில் போட்டியிடஜி.எஸ்.டி. இணக்கம் அவசியம் என்றாலும், ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் ரீபண்ட் தாமதம், உள்ளீட்டு வரி வரவு (ஐ.டி.சி) முரண்பாடுகள் போன்ற சவால்களுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும்.
- சுப்ரமணியன்: தலைவர்:
