/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி
ADDED : ஜன 23, 2025 11:28 PM

உடுமலை; உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில், மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி நடந்தது.
உடுமலை ராஜேந்திரா ரோட்டிலுள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான, வினாடி - வினா போட்டி நடந்தது.
உடுமலை சுற்றுப்பகுதியில், பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் ஜீவசங்கீதா வரவேற்றார். மாணவர்களுக்கு, 5 தலைப்புகளின் கீழ் போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பங்கேற்ற மாணவர்களுக்கு, இணையவழியில் சான்றிதழ்கள் மற்றும் 'எக்ஸாம் வாரியர்' என்ற புத்தகமும் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஸ்ருதி நன்றி தெரிவித்தார்.

