/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சண்டே ருசித்து சாப்பிட ராய் களி... பார்த்து ரசிக்க 'கதகளி' :கல்லுாரி கலைவிழாவில் 'கலக்கல்'

ADDED : செப் 29, 2024 02:15 AM

அரசு கல்லுாரி மாணவியரின் திறமையை வெளிக்கொணரும் விதமாக, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், பல்சுவை கலைநிகழ்ச்சி மூன்று நாள் நடந்தது. கதகளி, பரத நாட்டியம் ஒரு குரூப் தயாராக, 'எல்லாமே குத்தாட்டம் தான்' என அதிரடி காட்ட மற்றொரு மாணவியர் குரூப் தயாரானது.
கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஓரிடத்தில் அமைதி. ஒரு மாணவிக்கு நான்கு மாணவியர் சேர்ந்து மணமகள் போல் சூப்பராக அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். சிகை அலங்காரம், மெஹந்தி தனி. 'அடுப்பில்லா சமையல்' ஒரு பக்கம். அடுப்பு வைத்து நெய் மணக்க லட்டு தயாரிப்பு மறுபக்கம்.
இது ஒருபுறமிருக்கு மேடை நிகழ்ச்சிகள் தனி சுவை. மொபைல் போன் பயன்பாடு நன்மை தான்; ஆனால், அதுவே அனுதினமும் தொடர்வதால் ஏற்படுத்தும் தீமை எனும் தலைப்பில், பேசாமல் பேச வைத்த மாணவியரின் சைகை மொழி (மைம்) நாடகம், பலத்த கைதட்டல்களை பெற்றது.
வீணாகி துாக்கியெறியும் தேங்காய்சிரட்டை, கிழித்தெறியும் பேப்பர்களில் கூட எங்களால் ஒரு உபயோகமான பொருட்களை செய்து காட்ட முடியும் என அசத்தியிருந்தனர், மாணவியர் பலர். தேசிய ஒற்றுமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, நீதி வேண்டும், கல்வியியல் மேம்பாடு, நம் நாட்டின் தேசிய சின்னங்கள், எம்மதமும் சம்மதம், பெண் அதிகாரம் வலிமை உள்ளிட்டவை குறித்த கோலங்கள், பார்வையாளர்களை கவனிக்க வைத்தன.
--------------
மனங்களை மயக்கிய 'மைம் ஷோ'
வீணான பொருட்களில் கலைநயம்