ADDED : மே 14, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ; திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில் ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
பணியை, கோவை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மேம்பாலத்தின் தரம், சாலை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது.
ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் சுஜாதா, கோட்டப் பொறியாளர் கிருஷ்ணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.