sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரயில்வே கூட்ஸ்ெஷட் பணி துவங்கியது

/

ரயில்வே கூட்ஸ்ெஷட் பணி துவங்கியது

ரயில்வே கூட்ஸ்ெஷட் பணி துவங்கியது

ரயில்வே கூட்ஸ்ெஷட் பணி துவங்கியது


ADDED : நவ 01, 2025 12:25 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மத்திய அரசின் 'கதிசக்தி' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் விரிவாக்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், சரக்கு ரயில்கள் நின்று, சரக்கு இறக்கும் இடம், வஞ்சிபாளையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் இயக்கம், சரக்கு கையாளுதல் வாயிலாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில்வே ஸ்டேஷன்களின் கூட்ஸ்ெஷட்களை (சரக்கு முனையம்) 'கதி சக்தி' திட்டத்தில் மேம்படுத்த ரயில்வே முடிவெடுத்தது. கட்டமைப்புகளை மேம்படுத்தி, விரிவாக்கம் செய்யும் கூட்ஸ்ெஷட்கள் பட்டியலில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனும் இடம் பெற்றது.

கடந்த ஆக. மாதம் இதற்கான பணிகள் துவங்கிய நிலையில், செப். மாத இறுதியில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த நுாற்றாண்டு பழமை வாய்ந்த கூட்ஸ்ெஷட் கட்டடங்கள் இடிக்கும் பணி துவங்கியது.

வஞ்சிபாளையத்துக்கு மாற்றம் முழுமையாக கூட்ஸ்ெஷட் இடித்து அகற்றும் பணி நடந்து வரும் நிலையில், திருப்பூர் வரும் சரக்கு ரயில்கள் இயக்கம், வஞ்சிபாளையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.திருப்பூர் - ஈரோடு வழித்தடத்தில் திருப்பூருக்கு அடுத்து, சரக்குகளை ஏற்றி இறக்கும் பிளாட்பார்ம் வசதி கொண்டது வஞ்சிபாளையம் கூட்ஸ்ெஷட் என்பதால், வெளி மாநிலத்தில் இருந்து தானியங்கள், கோழித்தீவனம், சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம் ஏற்றி வரும் சரக்கு ரயில்கள், திருப்பூரில் நிற்காமல், வஞ்சிபாளையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு சரக்குகளை இறக்கி, லாரிகள் வாயிலாக பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தொழிலாளர்கள் பயணம் திருப்பூர் கூட்ஸ்ெஷட்டில், 45 பெண் தொழிலாளர் உட்பட, 257 பேர் சுமைப்பணி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். சேலம், ஈரோடு, கோபி, திருப்பூரின் பல்வேறு பகுதியில் இருந்து பணிக்கு வரும் இவர்கள், திருப்பூருக்கு பதில் வஞ்சிபாளையம் சரக்கு முனையம் சென்று அங்கு பணிபுரிகின்றனர்.

ரயில்களில் இருந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் நுாறு லாரிகள் வஞ்சிபாளையம் கூட்ஸ்ெஷட் சென்றுள்ளது. நுாறு ஆண்டுகளாக, 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு வந்த கூட்ஸ்ெஷட், வெறிச்சோடி காணப்படுகிறது.

நுாற்றாண்டு கால கூட்ஸ்ெஷட்டில் பத்து முதல், 15 சரக்கு ரயில் பெட்டிகள் மட்டுமே, பிளாட்பார்மில் நின்று, லாரிகளை அருகில் நிறுத்தி சரக்கு ஏற்றி இறக்கும் நிலை இருந்தது. இதனால், குறிப்பிட்ட பெட்டிகளில் சரக்கு ஏற்றி, இறக்கிய பின், சரக்கு ரயிலை, அங்கும், இங்கும் நகர்த்த வேண்டிய சிரமங்கள் இருந்தது. லாரி - சரக்கு ரயில் பெட்டி உயரம் சமமாக இல்லாததால், சுமைப்பணி தொழிலாளர்கள் ஏறி, இறங்க வேண்டிய நிலை இருந்தது; நடைமுறை சிக்கல்களால் சரக்குகளை இறக்குவதிலும் தாமதங்கள் நேரிட்டது. இந்நிலையில், லாரி உயரத்துக்கு ஏற்றவாறு, பிளாட்பார்ம்களை உயர்த்தி கட்டி, விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூட்ஸ்ெஷட் துவங்கி சபாபதிபுரம் வரையும், முதல் ரயில்வே கேட் வரை மற்றொரு பகுதியாகவும் பிளாட்பார்ம் துாரம் நீட்டிப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளும் துவங்கியுள்ளது.








      Dinamalar
      Follow us