தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வசதிகள் இல்லாத ரயில்வே ஸ்டேஷன் பயணியர் பாதிப்பு 

 வசதிகள் இல்லாத ரயில்வே ஸ்டேஷன் பயணியர் பாதிப்பு 

 வசதிகள் இல்லாத ரயில்வே ஸ்டேஷன் பயணியர் பாதிப்பு 


ADDED : மார் 29, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 09:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் இருக்கை மற்றும் மேற்கூரை வசதியை ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தியும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இவ்வழித்தடம் மின்மயமாக்கலுக்கு பிறகு, ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்துார், சென்னை உள்ளிட்ட ரயில்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆண்டுதோறும், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வாயிலாக கிடைக்கும் வருவாயும், கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஆனால் அடிப்படை வசதிகள் மேம்பாட்டில், இந்த ஸ்டேஷன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது ரயிலுக்கு காத்திருக்கும் பயணியருக்கு மேற்கூரை வசதியில்லை.

ஒரு ப்ளாட்பார்ம்க்கு மட்டுமே மேற்கூரை உள்ளது. பிற பகுதிகளில், வெயில் மற்றும் மழைக்காலத்தில், திறந்தவெளியில் காத்திருக்க பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக, முதியவர்களும், குழந்தைகளும் பாதிக்கின்றனர். இதே போல், குடிநீர் வசதியும் இல்லை. குழாய்கள் பழுதடைந்து, அதற்கான மேடைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டன.

கழிப்பிடங்களும் போதியளவு இல்லை. அகல ரயில்பாதை பணிகளுக்கு பிறகு, உடுமலை ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பது பயணியரை வேதனையடைய செய்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர், மேற்கூரை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயில் அருகிலுள்ள காலியிடத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும், பயணியர் பாதுகாப்புக்காக, புறக்காவல் நிலையமும் அமைக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us