ADDED : அக் 13, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்,: தற்போது ஒரு கிலோ மக்காச்சோளம், 27 ரூபாய்க்கு விலை போகிறது. சில்லரை விற்பனையில், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்காச்சோளத்திற்கு அதிக விலை கிடைப்பதால் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் ஆர்வம் விவசாயிகளிடம் அதிகரித்துள்ளது.
மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டாலும் புரட்டாசி பட்டமே சிறந்தது. இந்த சீசனில் நடவு செய்தால் போதும் மழையை நம்பியே வளர்ந்து விடும். தற்போது நல்ல மழை பெய்து வருவதாலும் பி.ஏ.பி., பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
--
கொடுவாய் அருகே மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டுள்ள வயல்