/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பகலில் விடை கொடுத்த மழை வர்த்தகர்கள் - மக்கள் நிம்மதி
/
பகலில் விடை கொடுத்த மழை வர்த்தகர்கள் - மக்கள் நிம்மதி
பகலில் விடை கொடுத்த மழை வர்த்தகர்கள் - மக்கள் நிம்மதி
பகலில் விடை கொடுத்த மழை வர்த்தகர்கள் - மக்கள் நிம்மதி
ADDED : அக் 18, 2025 11:30 PM
திருப்பூர்: கடந்த இரு தினங்களாக திருப்பூரில் மாலை துவங்கி, இரவு வரை மழை பெய்த நிலையில், நேற்று பகலில் மழை சற்று ஓய்வு கொடுத்ததால், தீபாவளி வியாபாரம் களைகட்டியது; வர்த்தகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
திருப்பூர் மக்களின் தீபாவளி ஷாப்பிங் கடந்த வாரம் முதலே சுறுசுறுப்பாக இருந்தாலும், கடந்த நான்கு தினங்களாக தான் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கடைகளை தேட துவங்கியுள்ளனர்.
தீபாவளி வியாபாரத்தை நம்பி ரோட்டோரம் வியாபாரிகள் பலர் கடை விரித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக திருப்பூரில் மாலை, 3:00 மணிக்கு கருமேக கூட்டங்கள் திரண்டு, 5:00 மணி துவங்கி, இரவு வரை மழை பெய்தது. இடைவெளியின்றி பெய்த மழையால், மாலை நேர தீபாவளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சிறு வியாபாரிகள், ரோட்டோரத்தில் கடை வைத்தவர்கள், வருண பகவான் வழிவிட வேண்டுமென எதிர்பார்த்து காத்திருந்தனர். நேற்று காலை முதல் மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம், 2:00 மணிக்கு வானம் கரு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. மாலை 6:00 மணி வரை மழை இல்லை. நேற்று மழை ஓய்வெடுத்த நிலையில், தீபாவளி விற்பனையும் களை கட்டியதால், வியாபாரிகளும், ஷாப்பிங் செய்த பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.