/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்
/
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்
ADDED : நவ 23, 2025 05:17 AM

திருப்பூர்: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட, 10 வது வார்டில் கழிவுநீர் கால்வாய் முறையாக சீரமைக்காமல் உள்ளது. இதனால், மழை காலங்களில் மழை நீர் வழிந்தோட வழியில்லாமல், குடியிருப்புகளுக்குள் குளம் போல் தேங்கி நின்று வருகிறது.
இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
நேற்று முன்தினமும் நேற்றும் பரவலாக காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது. சில வார்டு பகுதியில் குடியிருப்பை மழை நீர் சூழ்ந்தது.
இதன் காரணமாக, 10வது வார்டுக்கு உட்பட்ட பல இடங்களில், சாக்கடை நீருடன் சேர்ந்து, மழை நீர் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். எனவே, இதுதொடர்பாக, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

