ADDED : மார் 18, 2026 08:43 PM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை நுாறு அடி ரோட்டில், மழை நீர் வடிகால் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், வீணாக உள்ளது.
உடுமலை தாராபுரம் ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட், பழநி ரோட்டை இணைக்கும் வகையில், நுாறு அடி ரோடு அமைந்துள்ளது.
வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகளவு உள்ள இந்த ரோட்டில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கியது.
இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், நிதி வீணாகியுள்ளதோடு, மழை காலங்களில் ரோட்டிலேயே மழை நீர் வீணாகும் நிலை உள்ளது.
எனவே, நுாறு அடி ரோட்டின் இரு புறமும், முழுமையாக மழை நீர் வடிகால் அமைக்கவும், யு.எஸ்.எஸ்., காலனி ஓடையில் இணைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
