/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுக்குள் புகுந்த மழைநீர்; பொதுமக்கள் கடும் அவதி
/
வீட்டுக்குள் புகுந்த மழைநீர்; பொதுமக்கள் கடும் அவதி
வீட்டுக்குள் புகுந்த மழைநீர்; பொதுமக்கள் கடும் அவதி
வீட்டுக்குள் புகுந்த மழைநீர்; பொதுமக்கள் கடும் அவதி
ADDED : அக் 16, 2024 12:33 AM

அனுப்பர்பாளையம் : மழையால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவபட்டி எஸ்.பி., காலனியில் ஐந்து வீதிகள் உள்ளன. இதில், 2வது வீதியில் உள்ள மூன்று வீடுகளிலும், நான்காவது வீதியில் உள்ள எட்டு வீதிகளிலும் மழைநீர் புகுந்தது.
கழிவு நீர் செல்லும் சாக்கடை கால்வாய் போதிய அகலம் இல்லாததால், மழை நேரங்களில் அடித்து வரும் மழை நீருடன் கழிவு நீர் கால்வாயை விட்டு வெளியேறி வீட்டுக்குள் புகுந்து விடுகிறது.
வீடு முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. அதுபோல், ரங்கநாதபுரம் ஏ.டி., காலனியில் உள்ள எட்டு வீடுகளுக்குள் மழை புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிலி பாளையத்தில் இருந்து கணியாம்பூண்டி செல்லும் ரோட்டில் ஒரு காம்பவுண்டில் உள்ள, 10 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், ரோடு முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல்காட்சியளிக்கிறது.