/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைக்கால பாதுகாப்பு மின் வாரியம் அறிவுரை
/
மழைக்கால பாதுகாப்பு மின் வாரியம் அறிவுரை
ADDED : அக் 25, 2025 01:10 AM
வ டகிழக்கு பருவமழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருப்பூர் மின் ஆய்வுத்துறை மின் ஆய்வாளர் பழனிசாமி அறிக்கை:
n வடகிழக்கு பருவமழை காலத்தில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும். ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்ற நபர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர்களை கொண்டு மட்டுமே செய்யவேண்டும்.
n ஐ.எஸ்.ஐ., முத்திரையுள்ள, தரமான ஒயர், மின் சாதனங்களையே வாங்கி பொருத்தவேண்டும். பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்யவேண்டும்.
n பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நிலல இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் பிளக்குகள் பயன்படுத்தி மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்பட ேவண்டும்.
n உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனடியாக மாற்றவேண்டும். கேபிள் டிவி வயர்களை, உயரழுத்த மின் கம்பிகளுக்கு அருகே கொண்டுசெல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எர்த்) அமைக்கப்பட்டிருக்கவேண்டும்; குழந்தைகள், விலங்குகள் தொடாதவகையில் பராமரிக்கவேண்டும்.
n மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்களின் அருகே செல்லக்கூடாது. மழை, காற்று காரணமாக அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகே செல்லக்கூடாது; அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கவேண்டும்.
n பயன்பாடு இல்லாத நேரங்களில், மின் சாதனங்களை சுவிட்ச் ஆப் செய்துவைக்கவேண்டும். இனி, மின்னலின்போது, கான்கிரீட் கூரையினாலான பெரிய கட்டடம், வீடு அல்லது உலோகத்தாலான பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடையுங்கள்.
n இடி, மின்னல் நேரங்களில், 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், போன் பயன்படுத்தக்கூடாது; திறந்த நிலையில் உள்ள கதவு, ஜன்னல் அருகே இருக்கக்கூடாது.
n தண்ணீர் தேங்கிய இடங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்ச்களை இயக்கக்கூடாது.

