
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த குடியரசு தின விழா தடகளப்போட்டியில், ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 14 வயதினர் பிரிவில் வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதலில் மாணவி சலோமி முதலிடம் பெற்றார். குண்டு எறிதலில் 10.29 மீ., எறிந்து புதிய சாதனை படைத்தார். 19 வயதினர் பிரிவில் மாணவர் குருதர்ஷன் 100 மீ., ஓட்டத்தில் 2ம் இடம் பெற்றார்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த ேஹண்ட்பால் போட்டியில் 14 வயதினர் பிரிவில் சலோமி, 19 வயதினர் பிரிவில் குருதர்ஷன் ஆகியோர் தமிழக அணிக்காக தேர்வு பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு தாளாளர் ராஜ்குமார், முதல்வர் கலாராணி, செயலர் ஹரிபிரசாத், உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜ் மற்றும் திருப்பூர் கைப்பந்து கழகம் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

