/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் திருப்பதி கோவிலில் 'ராமம் நல்ல நாமம்' நிகழ்ச்சி
/
திருப்பூர் திருப்பதி கோவிலில் 'ராமம் நல்ல நாமம்' நிகழ்ச்சி
திருப்பூர் திருப்பதி கோவிலில் 'ராமம் நல்ல நாமம்' நிகழ்ச்சி
திருப்பூர் திருப்பதி கோவிலில் 'ராமம் நல்ல நாமம்' நிகழ்ச்சி
ADDED : ஜன 22, 2024 12:49 AM
திருப்பூர்:அயோத்தி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை திருப்பூர் திருப்பதி கோவிலில் 'ராமம் நல்ல நாமம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை திருப்பூர் திருப்பதி கோவிலில் ராம நாம லிகித ஜபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி முன் அமர்ந்து, 'ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம' எனும் தாரக நாம மந்திரத்தை, 108 தடவை எழுதி சமர்ப்பிக்கலாம்.
லிகித (எழுத்து) ஜபம் என்பது இறைவனின் பெயரை தொடர்ந்து எழுதும் ஒரு சக்தி வாய்ந்த பழமையான பிரார்த்தனை முறை. காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் இதனை, அன்றாடம் கடைபிடித்து வரும் குடும்பங்கள் பல உள்ளன.
இதற்கான எழுது பொருட்கள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், குடும்பத்தினர் அனைவரும், குறிப்பாக குழந்தைகள் இந்த சரித்திரம் வாய்ந்த நாளன்று பங்கேற்க கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். விவரங்களுக்கு, 94431 - 34176 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.