/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் ரம்ஜான் கொண்டாட்டம்
/
கல்லுாரியில் ரம்ஜான் கொண்டாட்டம்
ADDED : மார் 28, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், ரம்ஜான் கொண்டாட்டம் நடந்தது. இக்கல்லுாரியில் நடந்த ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு, கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். மாணவி ஜெஸினா வரவேற்றார். ஆலோசகர் மஞ்சுளா, கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி முன்னிலை வகித்தனர்.
மதசார்பின்மையுடன் இருக்க வேண்டுமெனவும், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் பேசினர்.
மாணவியர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாணவி அப்சானா நன்றி தெரிவித்தார். மாணவியர் நிஷாரா, ஷாமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.