/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் ராமாயண சொற்பொழிவு
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் ராமாயண சொற்பொழிவு
ADDED : நவ 28, 2024 06:22 AM
திருப்பூர்; திருப்பூர், ஸ்ரீஐயப்பன் கோவிலில், இன்று முதல் டிச., 7 ம் தேதி வரை, ஸ்ரீமத் ராமாயணம் சொற்பொழிவு நடக்கிறது.
திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், ஆராட்டு உற்சவம் நடந்தது. தினமும் மாலை, 6:45 மணிக்கு, கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. அவ்வகையில், ஸ்ரீமத் ராமாயணம் சொற்பொழிவு, இன்று துவங்கி, டிச., 7ம் தேதி வரை நடைபெறுகிறது. மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சீடர் முரளிஜீ, ராமாயண சொற்பொழிவு நிகழ்த்துகிறார். ஸ்ரீராம ஜனனம், சீதா கல்யாணம், சுக்ரீவ பட்டாபிேஷகம், சுந்தரகாண்டம் என பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடக்கிறது.
'விரதம், தானம், தவம், தீர்த்த யாத்திரையால் கிடைக்கும் பலன்கள், ராமாயண சொற்பொழிவு கேட்பதால் கிடைக்கும். அனைவரும் ராமாயண சொற்பொழிவு கேட்டு, பயன்பெறுமாறு, ஐயப்பன் கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.