ADDED : செப் 30, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தாராபுரத்தில், ஆறு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். தாராபுரத்தை சேர்ந்தவர், ஆறு வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சிறுமியின் தந்தையின் நண்பர் கார்வேந்தன், 32 என்பவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து கைது செய்தனர். கார்வேந்தனை, சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதின் பேரில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.