தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அதிவிரைவு படை கொடி அணிவகுப்பு

 அதிவிரைவு படை கொடி அணிவகுப்பு

 அதிவிரைவு படை கொடி அணிவகுப்பு


ADDED : பிப் 24, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: மத்திய அரசு, தமிழகத்தில், திருப்பூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களை, அதிக பதற்றம் கொண்டவையாக அறிவித்து, கண்காணித்து வருகிறது. அந்த மாவட்டங்களில், மத்திய அதிவிரைவுப்படையினர் (ஆர்.ஏ.எப்.,) ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, டில்லியை தலைமையிடமாக கொண்ட மத்திய அதிவிரைவுப்படையின், வெள்ளலுாரில் உள்ள கோவை பட்டாலியன் அணியினர், டி.எஸ்.பி. கேசவன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மது, மணிவண்ணன் உட்பட, 40 பேர் திருப்பூருக்கு நேற்று வந்தனர்.

சட்டசபை தேர்தலையொட்டி, இப்படையினர் திருப்பூரில் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதில், பதற்றமான இடங்கள், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், இதற்கு முன் கலவரம் நடந்த இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பெற்று வருகின்றனர். நேற்று முதல்கட்டமாக, வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.எஸ். நகர், நஞ்சப்பா நகர், குமார் நகர், பி.என். ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

அதன்பின், திருமுருகன்பூண்டி மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பூலுவபட்டி, பாண்டியன் நகர் பகுதியில் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us