/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழம்பில் விழுந்த எலி பேஸ்ட்: மனைவி பலி; கணவருக்கு சிகிச்சை
/
குழம்பில் விழுந்த எலி பேஸ்ட்: மனைவி பலி; கணவருக்கு சிகிச்சை
குழம்பில் விழுந்த எலி பேஸ்ட்: மனைவி பலி; கணவருக்கு சிகிச்சை
குழம்பில் விழுந்த எலி பேஸ்ட்: மனைவி பலி; கணவருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 23, 2025 10:04 PM
திருப்பூர்; திருப்பூரில் குழம்பில் விழுந்த எலி பேஸ்ட் குறித்து தெரியாமல் தம்பதி சாப்பிட்டனர். அதில், மனைவி இறந்தார். கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர், கருவம்பாளையத்தை சேர்ந்தவர் ரேவதி, 40. வீட்டிலிருந்த எலியை பிடிக்க எலி பேஸ்ட் வாங்கி வந்து சமையல் அறையில் உள்ள ஜன்னல் மீது வைத்திருந்தார். கடந்த, 13ம் தேதி எதிர்பாராத விதமாக எலி பேஸ்ட் குழம்பில் விழுந்தது. இதையறியாமல் ரேவதி, அவரது கணவர் காலை, மதியம், இரவு சாப்பிட்டனர்.
பின், குழம்பில் எலி பேஸ்ட் விழுந்து இருந்தது குறித்து தெரிந்தது. இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரேவதிக்கு உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 21ம் தேதி இறந்தார். கணவர் சிகிச்சையில் உயிர் பிழைத்தார். இது குறித்து, சென்டரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.