ADDED : ஜூன் 29, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்த்தல் அல்லது நீக்கம், கார்டு தொலைந்து போதல் உள்ளிட்ட காரணங்களால் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நகல் ரேஷன் கார்டுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.
சென்னையில் இருந்து தற்போது அச்சிடப்படாத ரேஷன் கார்டுகள் திருப்பூருக்கு வந்து சேர்ந்துள்ளதால், ஒப்புதல் பெற்ற விண்ணப்பங்களுக்கான கார்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன.
விரைவில் புதியமற்றும் நகல் ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என வழங்கல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
