/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரேஷன் ஊழியர் ஊதிய நிர்ணயம் குழு அமைக்க வேண்டும்'
/
'ரேஷன் ஊழியர் ஊதிய நிர்ணயம் குழு அமைக்க வேண்டும்'
ADDED : ஜூலை 27, 2025 11:35 PM
திருப்பூர்; தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தமிழக முதல்வர், முதன்மை செயலாளர் மற்றும் கூட்டுறவு துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பிய மனு:
ேரஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த 1995 முதல் குழு அமைத்து அரசாணை வெளியிட்டு ஊதியம் மற்றும் சலுகை பெறுகின்றனர். அவர்களை 8வது ஊதியக்குழுவில் இணைத்து ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் என்பதால், செட்டில்மென்ட் தொகையும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் போல் வழங்க வேண்டும்.
ஊதிய நிர்ணயக்குழு ஏற்படுத்தி ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும். இக்குழுவில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் உறுப்பினராக்கப்பட வேண்டும்.