ADDED : மார் 09, 2024 08:05 AM
அ நிறம் | அளவு
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்ட சிறப்பு குறைகேட்பு கூட்டம், இன்று நடைபெறுகிறது. அவிநாசியில் வஞ்சிபாளையம் கூட்டுறவு சங்கம்; தாராபுரத்தில் தேர்பட்டி; காங்கயத்தில் பச்சாபாளையம்; பல்லடத்தில் அனுப்பட்டி; திருப்பூர் வடக்கு தாலுகாவில் நெருப்பெரிச்சல்; திருப்பூர் தெற்கு தாலுகாவில் கரட்டுப்பாளையம்; ஊத்துக்குளியில் விருமாண்டம்பாளையம் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறுகிறது.
முகாமில், குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், டி.எஸ்.ஓ., க்கள், ரேஷன் கார்டுதார்களின் குறைகளை கேட்கின்றனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு மற்றும் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
