ADDED : அக் 08, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை தாலுகாவுக்கு, வடுகபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்திலும், மடத்துக்குளம் தாலுகாவிற்கு, பாப்பான்குளம் வேளாண் கூட்டுறவு சங் க வளாகத்திலும், ரேஷன் குறை தீர்க்கும் முகாம், வரும் 11ம் தேதி, காலை, 10:00 மணி முதல், 1:00மணி வ ரை நடக்கிறது.
முகாம்களில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண்கள் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வு காணப்படும், என, குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.