/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேகை தேய்ந்த விரல்கள்கை நழுவும் ரேஷன் பொருள்
/
ரேகை தேய்ந்த விரல்கள்கை நழுவும் ரேஷன் பொருள்
ADDED : மார் 29, 2025 06:16 AM
திருப்பூர், : ரேஷன் பொருட்களை நம்பியுள்ள முதியோர் பலரின் விரல் ரேகை தேய்ந்துள்ளதால், ரேஷன் பொருட்கள் கை நழுவுகின்றன. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நுகர்வோர் கூட்டம் நடந்தது.
இதில், திருமுருகன்பூண்டி, நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர் வக்கீல் கவிதா தனசேகர் பங்கேற்று பேசியதாவது:
மூத்த குடிமக்கள் பலர், ரேஷனில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்களை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். ரேஷன் பொருள் வாங்க 'பாய்ன்ட் ஆப் சேல்' உபகரணத்தில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற நிலையில், பலரது முதியோரின் விரல் ரேகை பதிவாவது இல்லை; இதனால், அவர்கள் அலைகழிப்புக்கு ஆளாவதுடன், அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் கை நழுவும் நிலையும் உள்ளது. எனவே, கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட மாற்று வழிகளில், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்களின் செயல்பாடு, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. தெரு நாய்களால் கடிபட்டு, ரேபிஸ் நோய் தாக்கி இறப்போர் அதிகம் என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனித உயிர் விலைமதிப்பற்றது என்ற சூழலில், தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.