/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடை இடமாற்றம் தி.மு.க., 'குஸ்தி' அம்பலம்
/
ரேஷன் கடை இடமாற்றம் தி.மு.க., 'குஸ்தி' அம்பலம்
ADDED : மே 13, 2025 12:27 AM
திருப்பூர், ; திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு, துரைசாமி புரம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் செயல்படுத்தப்படும் ரேஷன் கடை உள்ளது.
இக்கடை புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வேறு கட்டடத்துக்கு இக்கடை மாற்றம் செய்யப்பட்டு நேற்று முதல் இயங்கத் துவங்கியது. புதிய வளாகத்தில் இக்கடையை வடக்கு சிவில் சப்ளை தாசில்தார் உஷாராணி, ஆய்வாளர் ராகுல் ஆகியோர் திறந்து வைத்தனர். தி.மு.க., பகுதி செயலாளர் ஜோதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கட்சிக்குள் புகைச்சல்
இந்நிகழ்ச்சியில் பாண்டியன் நகர் பகுதி தி.மு.க., செயலாளர் ஜோதி உள்ளிட்ட கட்சியினர் சிலர் கலந்து கொண்டனர். ஆனால், வார்டு செயலாளர் மயில்சாமி பங்கேற்கவில்லை.
இது குறித்த அவர் கூறுகையில், 'பகுதி செயலாளருக்கும் இந்த வார்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாண்டியன் நகர் பகுதியில் உள்ள எட்டு வார்டு செயலாளர்களையும் அவர் மதிப்பதில்லை.
கண்டு கொள்வதும் இல்லை. கட்சி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி நடந்தாலும், வார்டு செயலாளர் களுக்கு எந்த அழைப்பும், தகவலும் தருவதில்லை. கட்சி நிர்வாகிகளை புறக்கணிக்கிறார். இது குறித்து மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் பொது செயலாளருக்கும் புகார் அனுப்பியுள்ளேன்,' என்றார்.