ADDED : செப் 06, 2026 05:48 AM
தாராபுரம்:தாயுமானவன்
திட்டத்தில் வயோதிகர்களுக்கு இல்லம் தேடிச்சென்று ரேஷன் பொருட்களை
வழங்கும் திட்டத்தில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. இதை தீர்க்க வேண்டும்
என்று கூறி, ரேஷன் ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் ரேஷன் ஊழியர்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து பணிகளில்
ஈடுபட்டனர். இதுகுறித்து ரேஷன் ஊழியர் சங்கத்தின் மாவட்ட
நிர்வாகி ராமசாமி கூறியதாவது: வீடு வீடாக சென்று பொருட்கள் வழங்கும்
போது, மின்னணு இயந்திரத்துக்கும், வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள எடை
இயந்திரத்துக்கும் இடையே, 10 அடி துாரம் மட்டுமே இணைப்பு
செயல்படுகிறது. மாடிகளில் உள்ள முதியவர்களுக்கு சென்று கொடுக்கும்
போது சாத்தியப்படுவது இல்லை. இதுபோன்ற குறைகளை போக்க அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து
பணிகளில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
