ADDED : ஜூன் 08, 2026 03:59 AM
திருப்பூர்: காலையில 7 மணிக்கே கடைக்கு வரணும்னு அதிகாரிகள் மிரட்டுறாங்க... ஆனா கைரேகை வைக்கிற மெஷின்ல 4 மணி நேரம் கூட சார்ஜ் நிக்க மாட்டேங்குது இதுதான் தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் தற்போதைய குமுறல்.
புதிய சம்பள உயர்வு, பொங்கல் பரிசு ஊக்கத் தொகை மற்றும் அக விலைப் படி உயர்வு போன்ற கோரிக்கைகள் இன்னும் அமலுக்கு வராததால், சி.ஐ.டி.யு. ரேஷன் கடை ஊழியர் சங்கம் மாநில அளவிலான போராட்டத்தை அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ வேலை நேரம் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே.
ஆனால், 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ் நெட்வொர்க் கிடைக்காத மெஷின்களை வைத்துக்கொண்டு, தினமும் 12 மணி நேரம் வேலை செய்யச் சொல்லி அதிகாரிகள் தன்னிச்சையாக வற்புறுத்துவதால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கூட்டுறவுத் துறை பதிவாளர் உடனே தலையிட்டு இந்த குளறுபடிகளைச் சரிசெய்யாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனச் சங்கத்தின் மாநிலத் தலைவர்கவுதமன் எச்சரித்துள்ளார்.
