/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆட்டோமேடிக்' தொழில்நுட்பத்தில் ஆர்.பி.,டெக்னிக் 'சாப்ட்புளோ' மெஷின்

ADDED : மார் 03, 2024 12:07 AM

திருப்பூர்:திருப்பூர், கரைப்புதுார் அருகே இயங்கும், ஆர்.பி., டெக்னிக்' நிறுவனம், குறைந்த தண்ணீரில் சாயமிடும் தொழில்நுட்பத்துடன், புதிய 'சாப்ட்புளோ' டையிங் மெஷின்களை அறிமுகம் செய்துள்ளது.
திருப்பூர் சாய ஆலைகளுக்கு தேவையான, சாயமிடும் மெஷின்களை தயாரித்து வழங்குவதில், நீண்ட அனுபவம் பெற்றது ஆர்.பி., டெக்னிக் நிறுவனம். மொத்தம், அனுபவம் வாய்ந்த, 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன், 20 ஆயிரம் சதுரடி பரப்பில், 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. திருப்பூர் சுற்றுப்பகுதியில் மட்டும், 350 மெஷின்கள், இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆர்.பி., டெக்னிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஸ் கூறியதாவது:
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், ஆர்.பி., டெக்னிக்' நிறுவனத்தின், 'சாப்ட்புளோ' டையிங் மெஷின், 'நிட்-டெக்' கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ெஹட்டுக்கு, 400 கிலோ துணிவரை சாயமிடலாம்.
குறைந்த மின் செலவு மற்றும் குறைவான தண்ணீரை பயன்பாடு; எண்ணிலடங்கா பாதுகாப்பு வசதிகளுடன், புதிய சாப்ட்புளோ மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது; இது, திருப்பூர் சாய ஆலைகள் பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்றது.
இவ்வாறு, அவர் கூறினார்.