தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாசகர் புகார்

வாசகர் புகார்

வாசகர் புகார்


ADDED : ஏப் 22, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரங்களை வெட்டும் மர்ம நபர்கள்

பணி மந்தம்

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், வி.ஆர்.பி., நகர், இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் பணி மந்தமாக நடக்கிறது. பாதசாரிகள் சென்று வர வழியில்லை.

- புவனேஸ்வரி, எம்.எஸ்., நகர்.

திருப்பூர், 52வது வார்டு, தென்னம்பாளையம், பூம்புகார் நகரில், ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை அள்ள வேண்டும். தொட்டி வைக்க வேண்டும்.

- கணேசன், பூம்புகார் நகர்.

கால்வாய் அடைப்பு

திருப்பூர், பெரியாயிபாளையத்தில் கால்வாய் உடைந்துள்ளதால், கழிவுநீர் வெளியேறி செல்ல வழியில்லாமல் உள்ளது. கால்வாயை சீரமைக்க வேண்டும்.

- ஈஸ்வரன், பெரியாயிபாளையம்.

எரியாத விளக்கு

திருப்பூர், கருவம்பாளையம், புளியமரத்தோட்டம் மூன்றாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்

- சண்முகம், கருவம்பாளையம்.

மரங்கள் அகற்றம்

திருப்பூர், கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி கிழக்கு, குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில் மரங்கள் மர்மநபர்களால் வெட்டி அகற்றப்படுகிறது. பச்சை மரங்களை வெட்டுவோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவனாந்தம், குப்புசாமிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us