/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வாசிப்பது வெயிலை போன்றது எழுதுவது மழையைப் போன்றது'
/
'வாசிப்பது வெயிலை போன்றது எழுதுவது மழையைப் போன்றது'
'வாசிப்பது வெயிலை போன்றது எழுதுவது மழையைப் போன்றது'
'வாசிப்பது வெயிலை போன்றது எழுதுவது மழையைப் போன்றது'
ADDED : ஏப் 29, 2025 07:04 AM

பல்லடம்:
சுல்தான்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரஜினி பிரதாப் சிங் எழுதிய 'மாமழை போற்றுதும்', 'ஒரு ஸ்பூன் வெட்கம்' மற்றும் 'சூரல் பம்பிய சிறுகான் யாறு' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ், பொள்ளாச்சி தொடக்கக் கல்வி அலுவலர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் ரஜினி பிரதாப் சிங் பேசியதாவது:
என்னை எப்போதெல்லாம் பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் நான் வாசிக்கிறேன். எப்போதெல்லாம் என்னை பிடிக்கவில்லையோ, அப்போதெல்லாம் நான் எழுதுகிறேன் என்று ஒரு வாசகம் உள்ளது. எழுதுவது என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. வாசிப்பது என்பது வெயிலை போன்றது. எழுதுவது மழையைப் போன்றது. அவ்வப்போதுதான் அது தோன்றும்.
முதலில் வாசிப்பதில் தான் எழுதுவது துவங்கும். திருக்குறள், பாரதியார் கவிதைகளை போல, கவித்துவம் வாய்ந்த நூல்களைப் படித்தால், அதைப்போன்று நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இலக்கியம் கொட்டிக் கிடக்கும் நமது தமிழ் மொழிக்குள் நுழைந்த யாவரும் தீவிர வாசகர்களாக அல்லது கலைஞர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.