தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'வாசிப்பே சிறந்த முன்னேற்ற கருவி'

'வாசிப்பே சிறந்த முன்னேற்ற கருவி'

'வாசிப்பே சிறந்த முன்னேற்ற கருவி'


ADDED : ஆக 22, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 54-வது பட்டமேற்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

இளநிலையில் 637 பேரும், முதுநிலையில் 199 பேரும் என மொத்தம் 836 பேருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், ''வாசிப்புதான் ஒரு மனிதனின் அனைத்து படிநிலைகளிலும் முன்னேற உதவும் சிறந்த கருவி. பட்டம் பெற்ற பின்பும் வாசிப்பைத் தொடர வேண்டும். உயர்கல்வி, குறிப்பாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிரச்னைக்குத் தீர்வு காணவும், புதிய வழிகளைக் கண்டறியவும் ஆராய்ச்சி முக்கியம். ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினால் வாய்ப்புகள் தேடி வரும்'' என்றார். கல்லுாரியை சேர்ந்த எட்டு இளங்கலை, ஆறு முதுகலை மாணவ, மாணவியர் உட்பட 14 பேர் பாரதியார் பல்கலை அளவில் முதல் பத்து இடங்களுக்குள் பெற்று அசத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us