/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதி மீறி வர்த்தக இணைப்பு குறைகேட்பில் புகார் வாசிப்பு
/
விதி மீறி வர்த்தக இணைப்பு குறைகேட்பில் புகார் வாசிப்பு
விதி மீறி வர்த்தக இணைப்பு குறைகேட்பில் புகார் வாசிப்பு
விதி மீறி வர்த்தக இணைப்பு குறைகேட்பில் புகார் வாசிப்பு
ADDED : மார் 21, 2025 01:56 AM
திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதியில், ஒரே கடைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வர்த்தக மின் இணைப்பு வழங்கியுள்ளதால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது; மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் தலைமை வகித்தார். கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் பங்கேற்றார்.
மின்நுகர்வோர் மற்றும் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, மின்வாரிய சேவை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தனர். திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம், 'பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பர் அசோசியேஷன்' நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
திருப்பூரின் பல இடங்களில், ஒரே கடைகளுக்கு பல இணைப்பு வழங்கியுள்ளனர். சிலர், அதிக மின் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில், ஒரே கடைக்கு, இரண்டு மற்றும் மூன்று வர்த்தக மின் இணைப்புகள் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு மீட்டரிலும் குறைவான மின்பயன்பாடு பதிவாவதால், கட்டணமும் குறைவாக செலுத்துகின்றனர்; இது, மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துகிறது. எனவே, சட்டவிரோதமாக வழங்கிய வர்த்தக இணைப்பால், வாரியத்துக்கு வருவாய் பாதிக்கிறது.
மீண்டும் கடைகளை ஆய்வு செய்து, ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்துள்ள கடைகளின் இணைப்புகளை, ஒரே இணைப்பாக ஒருங்கிணைக்க வேண்டும்; உரிய மேல்நடவ டிக்கை எடுக்க வேண்டுமென, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மின்வாரிய அதிகாரிகள், விசாரித்து, மேல்நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தனர்.