UPDATED : ஜூன் 17, 2026 10:45 PM
ADDED : ஜூன் 17, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்குளி:ஊத்துக்குளி தாலுகா ரெட்டிபாளையம், அம்பேத்கர் நகரில், 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டும் ரோடு, மயானம், அங்கன்வாடி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றன.
இதுவரை பயன்படுத்தி வந்த ரயில் பாதையோர வழியிலும் தற்போது இரும்புத் தடுப்பு அமைக்கப்படுவதால், பாதை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் நேரடியாகத் தலையிட்டு மாற்று நிலம் மூலம் முறையான பாதை, மயான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஜமாபந்தியில் மனு அளித்துள்ளனர்.
