/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்திகரிப்பு நிலைய விவகாரம்: மா.கம்யூ. முற்றுகை போராட்டம்
/
சுத்திகரிப்பு நிலைய விவகாரம்: மா.கம்யூ. முற்றுகை போராட்டம்
சுத்திகரிப்பு நிலைய விவகாரம்: மா.கம்யூ. முற்றுகை போராட்டம்
சுத்திகரிப்பு நிலைய விவகாரம்: மா.கம்யூ. முற்றுகை போராட்டம்
ADDED : அக் 16, 2025 11:25 PM

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நல்லாறு அமைந்துள்ளது. ஆற்றை துார்வாரி ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என, மா.கம்யூ., வினர் தர்ணா போராட்டம் நடத்தினர். நல்லாற்றின் கரையோரம் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை வெளியிடுமாறு, நகராட்சி நிர்வாகத்திடம் மா.கம்யூ.வினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
நேற்று நகராட்சி கமிஷனரிடம், மனு அளிக்க சென்றபோது, கமிஷனர் இல்லாததால் பொறியாளரிடம் மனுவை அளிக்கும்படி போலீசார் கூறினர். அதனை ஏற்க மறுத்த கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி, கோஷமிட்டனர். அதனை தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான அனுமதி கடிதத்தை பார்வைக்கு வெளியிட நகராட்சி நிர்வாகம் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. மா.கம்யூ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், ராஜ், தேவி, நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவுரிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.