/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளைவு பகுதியில் பிரதிபலிப்பான் வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
/
வளைவு பகுதியில் பிரதிபலிப்பான் வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
வளைவு பகுதியில் பிரதிபலிப்பான் வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
வளைவு பகுதியில் பிரதிபலிப்பான் வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 22, 2024 10:55 PM

உடுமலை: உடுமலை அருகே, அபாய வளைவில் வைக்கப்பட்டுள்ள சென்டர்மீடியனில், ரிப்ளெக்டர் அமைக்காததால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
உடுமலை - சின்னாறு ரோட்டில், திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில், செங்குளம் அருகே அபாய வளைவு அமைந்துள்ளது.
அப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சமீபத்தில், ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது.
இதனால், விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிப்ளெக்டர்கள் அமைக்காததால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றனர்.
ரோட்டில் திடீர் வளைவு அமைந்துள்ள நிலையில், தெருவிளக்குகளும் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி சென்டர்மீடியனில் மோதும் அபாயம் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் சென்டர்மீடியனில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.