/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அர்ச்சகர்களுக்குபுத்தாக்க பயிற்சி
/
அர்ச்சகர்களுக்குபுத்தாக்க பயிற்சி
ADDED : மார் 07, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, : திருப்பூர் மாவட்டத்தில், கோவில் அர்ச்சகர், பட்டாச்சார்யார் மற்றும் ஓதுவாமூர்த்திகளுக்கான, புத்தாக்க பயிற்சி துவங்கியுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்களுக்கு, ஆண்டுதோறும், புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி துவங்கியுள்ளது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், அர்ச்சகர் மற்றும் ஓதுவாமூர்த்திகளுக்கும், திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பட்டாச்சார்யார்களுக்கும் பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சி, 8ம் தேதி (நாளை) வரை நடக்குமென, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

