/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செவிலியருக்கு புத்தாக்க பயிற்சி
/
செவிலியருக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஜூலை 29, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சேலம் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி சார்பில், ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி துவக்க விழா, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி உதவி கணக்கீடு அலுவலர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார்.
திருப்பூர் ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 47 செவிலியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை, நேர மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

