/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகள நடுவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
தடகள நடுவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : நவ 10, 2024 04:44 AM
திருப்பூர் : மாநில தடகள சங்க துணைத்தலைவர் சண்முகசுந்தரம் அறிக்கை:
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ நிப்ட் டீ கல்லுாரியில் வரும், 15 மற்றும், 16 ம் தேதி, மாநில தடகள நடுவர்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் மாநில நடுவர் தேர்வு (நிலை 1) நடக்கிறது.
பள்ளி - கல்லுாரிகளில் பணியாற்றி வரும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டு பயிற்சியாளர்கள், தடகள வீரர், வீராங்கனைகள், தடகள ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம்.
இருநாள் நடக்கும் இப்பயிற்சியில் முதல் நாள் தடகளப் போட்டி விதிகள், ஓடுதள அளவீடு குறித்து விளக்கம் தரப்படும். இரண்டாம் நாள்நடுவர் செயல்பாடு மற்றும் செய்முறைத்தேர்வு நடக்கும்.
மாநில நடுவர்குழு தொழில்நுட்ப நிர்வாகிகள் வழிகாட்டுதலின் படி, இம்முகாம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, திருப்பூர் தடகள சங்க நிர்வாகிகளை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.