/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க மறுப்பு'
/
'அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க மறுப்பு'
ADDED : ஏப் 24, 2025 06:29 AM
திருப்பூர்; ஊத்துக்குளி தாலுகாவில் நடந்த, 'உங்களை தேடி' முகாமில், மா.கம்யூ, கட்சியின் ஊத்துக்குளி தாலுகா உறுப்பினர் குழு சரஸ்வதி அளித்த மனு:
ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில், போதுமான செவிலியர், சுகாதார பணியாளர்கள் இல்லை என்ற காரணத்தை கூறி சிகிச்சை அளிப்பதில்லை. எக்ஸ்ரே பிரிவு முழுவதும் செயல்படுவதில்லை.
சிறிய எலும்பு பிரச்னைக்கும், திருப்பூர் சென்று எக்ஸ்ரே எடுக்க வேண்டியுள்ளது. டாக்டர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
தாலுகா அரசு மருத்துவமனை இருந்தும், சிறிய பிரச்னைக்கு கூட, மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழல் தொடர்கிறது.
போதிய டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளரை நியமித்து, தாலுகா அரசு மருத்துவ மனையில் அனைத்து அடிப்படை சிகிச்சைகளும் வழங்க உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

