/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு; வரும் டிச., 31 கடைசி அவகாசம்
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு; வரும் டிச., 31 கடைசி அவகாசம்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு; வரும் டிச., 31 கடைசி அவகாசம்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு; வரும் டிச., 31 கடைசி அவகாசம்
ADDED : செப் 24, 2024 11:42 PM
உடுமலை : பிறப்புச்சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்யாதவர்கள், வரும் டிச., 31க்குள் பதிவு செய்ய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்புச்சான்று என்பது கட்டாய ஆவணமாக உள்ளது. குழந்தையின் பெயருடன் கூடிய சான்று மட்டுமே, முழுமையான பிறப்பு சான்றாக கருத்தப்படும்.
பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள், 2000ம் படி பிறந்த, 15 ஆண்டுகளுக்குள் பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் படி, 2000ம் ஆண்டுக்கு முன், பிறந்த குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்ய முதல் கட்டமாக, 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த பெயர் பதிவிற்கான கால அவகாசமானது, மேலும் இரண்டு முறை, ஐந்தைந்து ஆண்டுகள் என, 10 ஆண்டுகளுக்கு, அதாவது வரும் டிச., 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அனைவரும் உரிய விதிமுறைகளின் படி குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவு செய்யலாம். எனவே 15 வயது நிரம்பிய அனைவரும் பெயர் பதிவு செய்வது கட்டாயமாகும்.
திருப்பூர் மாவட்டத்தில் பிறப்புச்சான்றில் குழந்தையின் பெயர் பதிவு செய்யாதவர்கள், வரும் டிச., 31க்குள், நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட உரிய பிறப்பு இறப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிறப்புச்சான்றில் குழந்தையின் பெயரை ஒரு முறை பதிவு செய்தால், பின்னர் மாற்ற இயலாது. 2018 முதல் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை crstn.org என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.