/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுவனை தாக்கியதை தட்டிக்கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து
/
சிறுவனை தாக்கியதை தட்டிக்கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து
சிறுவனை தாக்கியதை தட்டிக்கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து
சிறுவனை தாக்கியதை தட்டிக்கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து
ADDED : டிச 21, 2024 06:31 AM
அவிநாசி; சேவூர் அருகே காரில் கிறுக்கியதாக சிறுவனை தாக்கிய வாலிபரை தட்டிக்கேட்ட இருவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேவூர் அடுத்த அ.குரும் பபாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த 9 வயது சிறுவன், 4ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் கட்டட மேஸ்திரி வேலை செய்து வருபவர் கண்ணன் மகன் மோகன்ராஜ், 26.
நேற்று காலை ரோட்டில் நடந்து சென்ற சிறுவனை அழைத்த மோகன்ராஜ், வீட்டருகே நிறுத்தி வைத்திருந்த தனது கார் கண்ணாடியில் கை வைத்து கிறுக்கியதாக கூறி சிறுவனை தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று பலமாக தாக்கியுள்ளார்.
சிறுவனை காணாத பெற்றோர், உறவினர்களுடன் சிறுவனை தேடிய போது மோகன்ராஜ் வீட்டிலிருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
சிறுவனை தாக்கியது குறித்து தட்டிக்கேட்ட உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகியோரை மோகன்ராஜ் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார். சேவூர் போலீசார் விரைந்து சென்று, சிறுவன் மற்றும் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகியோரை மீட்டனர்.
திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிந்து, மோகன்ராஜை கைது செய்தனர். அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மோகன்ராஜ், மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.