/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி
/
அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி
அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி
அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி
ADDED : ஜன 20, 2024 02:42 AM
திருப்பூர்;சாமளாபுரம் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த நாகப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.சாமளாபுரம், மங்கலம் ரோட்டில் அங்கன்வாடி மையம் உள்ளது.
நேற்று காலை 11:00 மணியளவில் மையத்தில் குழந்தைகள் ஒரு புறம் அமர்ந்திருந்த நிலையில், பெரிய அளவிலான பாம்பு ஒன்று அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்தது.
இதனை பார்த்த மைய ஊழியர், மாணவர்களை வெளியேற்றி விட்டு, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமிக்கு தகவல் அளித்தார்.
மையத்துக்கு விரைந்த அவர், பாம்பு இருப்பதை உறுதிசெய்து, பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு துறையினர் சிறிது நேர முயற்சிக்குப் பின் அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் கேனில் அடைத்தனர்.
தொடர்ந்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டது.