/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி ஆசிரியை, மாணவி குடும்பத்தினருக்கு நிவாரணம்
/
அரசு பள்ளி ஆசிரியை, மாணவி குடும்பத்தினருக்கு நிவாரணம்
அரசு பள்ளி ஆசிரியை, மாணவி குடும்பத்தினருக்கு நிவாரணம்
அரசு பள்ளி ஆசிரியை, மாணவி குடும்பத்தினருக்கு நிவாரணம்
ADDED : டிச 13, 2024 11:01 PM
திருப்பூர்; வெள்ளகோவிலில், கடந்த, 10ம் தேதி டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், டூவீலரில் சென்று அரசு பள்ளி ஆசிரியை சரஸ்வதி மற்றும் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஸ்ரீராகவி இருவரும் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொரு மாணவி யாழினி, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த ஆசிரியை சரஸ்வதி மற்றும் மாணவி ஸ்ரீராகவி குடும்பத்தினருக்கு, தலா, 2 லட்சம் ரூபாய்; காயமடைந்த யாழினி குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாயை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நேற்று வழங்கினர். கலெக்டர்கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ.,செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உடனிருந்தனர்.