/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்கள்
/
புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்கள்
ADDED : டிச 06, 2024 04:57 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், புயல் பாதிப்பு பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருப்பூர் மாவட்டத்திலிருந்து நிவாரணப் பொருட்கள் நேற்று முன்தினம் 3 வாகனங்களில் 1,500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நேற்று இரண்டாவது நாளாக 4000 குடும்பங்களுக்கான மளிகை பொருள், பெட்டிகளில் பேக் ெசய்து அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வகையில் 8 வாகனங்களில் விழுப்புரம் மாவட்டத்துக்கு இப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து இந்த வாகனங்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, மண்டல குழு தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநகராட்சி சார்பில்...திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது.
நான்காம் மண்டலம், பலவஞ்சிபாளையம் சமுதாயக் கூட வளாகத்திலிருந்து, நிவாரண பொருட்களுடன் லாரியை, மேயர் தினேஷ்குமார் அனுப்பி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.