/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள்
/
புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள்
ADDED : டிச 07, 2024 06:47 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி மூன்று வாகனங்களிலும்; 5ம் தேதி, எட்டு வாகனங்களிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
நேற்று இரவு, 6 வாகனங்களில், நிவாரண பொருட்கள், விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அரிசி, சர்க்கரை, பருப்பு, ரவை, கோதுமை, மஞ்சள் துாள், மிளகாய் துாள், சாம்பார் துாள் அடங்கிய 3,500 பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. கலெக்டர் கிறிஸ்துராஜ், வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.