/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகள் முகாம் இடமாற்றம்
/
மாற்றுத்திறனாளிகள் முகாம் இடமாற்றம்
ADDED : அக் 07, 2025 11:42 PM
திருப்பூர்; வெள்ளிதோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம், இனி அக். மாதம் முதல் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அறை எண்: 96ல், காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடைபெறும்.
புதன்தோறும் கண், காது, கை, கால், தோல், ரத்த செல் குறைபாடு, குள்ளம் போன்ற மாற்றுத்திறன்களுக்கும் வெள்ளிதோறும் மனநலம், நரம்பு சார்ந்த மாற்றுத்திறன்களுக்கும் மருத்துவச்சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளர் அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.