/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகள் முகாம் இடமாற்றம்
/
மாற்றுத்திறனாளிகள் முகாம் இடமாற்றம்
ADDED : நவ 11, 2025 10:21 PM
உடுமலை: மாற்றுத்திறனாளிகள் முகாம் வழக்கம் போல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் மருத்துவ முகாம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்தது.
இதனை, திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அலைக்கழிக்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, அறை எண் 20, குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடக்கும்.
வழக்கம் போல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பங்கேற்று பயன்பெறலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

