/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்முன்புற வீடுகள் அகற்றம்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்முன்புற வீடுகள் அகற்றம்
ADDED : பிப் 12, 2025 12:26 AM

திருப்பூர்; திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் முன்புறமிருந்த தற்காலிக வீடுகள் அகற்றி, இடம் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம், கோவில்வழியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தற்காலிகமாக துாய்மைப் பணியாளர்கள் வசித்து வந்தனர்.
தனியார் ஒப்பந்த நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட, தினக்கூலி துாய்மைப் பணியாளர்கள் வசித்து வந்தனர். நீண்ட காலமாக, வெளி மாநிலங்களிலிருந்து இங்கு பணிக்கு வந்த அவர்கள் தற்காலிகமாக வீடு அமைத்து தங்கியிருந்தனர்.
தற்போது, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தின் முன், துாய்மை பணியாளர்கள் வசித்த வீடுகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்களுக்கு அடுக்கு மாடிக்குடியிருப்பில், வீடு வழங்கப்பட்டது.